அமலாக்க அதிகாரியை மிரட்டியதற்காக வணிகருக்கு 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர், மே.19-

கடந்த மார்ச் மாதம் இறுதியில் பலூன் வியாபாரி ஒருவருக்கு எதிராக எடுக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அமலாக்க அதிகாரியை மிரட்டிய குற்றத்திற்காக துணி வியாபாரி ஒருவருக்கு கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 6 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.

பலூன் வியாபாரிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதைப் போல அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்த்து பொது மக்களைத் தூண்டிவிடும் நோக்கில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக முஸ்தாபா சுலைமான் என்ற 57 வயதுடைய அந்தத் துணி வியாபாரி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் செராஸ், பண்டார் துன் ரஸாக்கில் உள்ள மெனாரா டிபிகேஎல் கட்டடத்தில் அந்தத் துணி வியாபாரி இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS