போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ஈப்போ, மே.19-

கட்டுமானத் தளத்தில் வெடிகுண்டு ஒன்று மண்ணில் புதையுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேரா, பாரிட், ஶ்ரீ இஸ்கண்டார், பண்டார் யுனிவெர்சிட்டி, சுங்கை தும்போவில் கடந்த வாரம் சனிக்கிழமை அந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பேரா தெஙா மாவட்ட போலீஸ் தலைவர் ஹாபேஃஸுல் ஹெல்மி ஹம்ஸா தெரிவித்துள்ளார்.

35 கிலோ எடை கொண்ட Artillery Shell 155mm வகையைச் சேர்ந்த அந்த வெடிகுண்டை, அந்தக் கட்டுமானத் தளத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மேம்பாட்டாளர் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வெடிகுண்டு வெடித்தால் உயிரிழப்பு ஏற்படும் பேராபத்து இருப்பதாகக் குறிப்பிட்ட ஹாபேஃஸுல் ஹெல்மி, அந்த வெடிகுண்டு இன்னமும் வெடிக்கும் ஆற்றலில் இருப்பதாகத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS