இஸ்கண்டார் புத்ரி, மே.19-
ஜோகூர் மாநில அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பக்காத்தான் ஹராப்பான் திட்டம் கொண்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அதன் ஜோகூர் மாநிலத் தலைவர் அண்ட்ரூ சென் கா எங் மறுத்துள்ளார்.
பாரிசான் நேஷனல் தலைமையில் செயல்பட்டு வரும் ஜோகூர் மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்ற கொள்கையுடன் பக்காத்தான் ஹராப்பான் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் பாரிசான் நேஷனல் ஆட்சியின் பொறுப்புக்கூறலைச் சரி செய்வது என்ற நிலையில் பக்காத்தான் ஹராப்பான் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வரும் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதே வேளையில் ஜோகூர் மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களை மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கவும் பக்காத்தான் ஹராப்பான் தயாராக இருப்பதாக அவர் விளக்கினார்.