ஒரு கோடி ரிங்கிட் பணப் பரிமாற்ற மோசடி கண்டுபிடிப்பு

கோலாலம்பூர், மே.19-

ஓர் அரசாங்க இலாகாவிற்கு ஒரு கோடியே 40 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்படும் அளவிற்கு பணப் பரிமாற்றம் தொடர்பாக அரசாங்கப் பணியாளர் ஒருவர் மோசடி செய்து இருப்பதை மலேசிய தேசியக் கணக்காய்வு இலாகா கண்டுபிடித்துள்ளது.

அந்த அரசாங்க ஊழியர், இந்த மோசடியை லண்டனில் செய்துள்ளார் என்று தேசியத் தலைமைக் கணக்காய்வாளர் நோர் யாத்தி அஹ்மாட் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்தப் பணப் பரிமாற்ற நடவடிக்கையை அவர் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்த நிலையில் ஒரு கோடியே 80 லட்சம் ரிங்கிட் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS