லங்காவி, மே.19-
நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கானத் தேர்தலில் கடும் போட்டி மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் வேட்பாளர்கள் மத்தியில் பகைமைப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
எந்தவொரு கருத்து வேறுபாடும் அல்லது சர்ச்சையும் ஓர் இணக்கமான சூழலில் தீர்க்கவும், கட்சியில் நிலவி வரும் சூட்டையும் தணிக்கவும் முற்பட வேண்டும்.
அதே வேளையில் தங்களுக்கு இடையில் இருக்கும் பாசப் பிணைப்பை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர பகைமைப் போக்குக்கு ஒரு போதும் வழிவிடக்கூடாது என்று டத்தோஸ்ரீ அன்வார் வேட்பாளர்களுக்கு நினைவுறுத்தியுள்ளார்.