கிள்ளான், மே.20-
கலால் வரி செலுத்தப்படாத மதுபான வகைகளைக் கடத்துவற்கு பள்ளி வேன் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிள்ளான், தாமான் ஶ்ரீ காடோங்கில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டது மூலம் இந்த விவகாரம் அம்பலமானதாக கோலக் கிள்ளான் கடல்சார் அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.
அந்த ஆடவர் நேற்று மதியம் 12 மணியளவில் கைது செய்யப்பட்டது மூலம் 47 ஆயிரத்து 553 ரிங்கிட் பெறுமானமுள்ள கலால் வரி செலுத்தப்படாத மதுபான வகைகள், பள்ளி வேனிலிருந்தது மீட்கப்பட்டதாக அந்தத் துறையின் விலாயா சத்து பிரிவின் கமாண்டர் ருஸ்லி சி அரி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டது மூலம் ஒரு பள்ளி வேன் மற்றும் சிறுரக லோரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.