விசாரணை வளையத்திற்குள் ஜேபிஎன்

புத்ராஜெயா, மே.20-

அடையாளக் கார்டு விண்ணப்பம் தொடர்பான விசாரணை, தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் அலுவலகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக, கவனிப்பாரற்ற நிலையில், கிடப்பில் இருந்து வருவது அமலாக்கத்துறை நேர்மை ஆணையமான இஏஐசி கண்டுபிடித்துள்ளது.

ஒரு விண்ணப்பம் தொடர்பான விசாரணை, பத்து ஆண்டுகளுக்கு மேலாக எவ்வாறு கவனிப்பாரற்ற நிலையில் கிடப்பில் உள்ளது என்று அந்த ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தேசிய பதிவு இலாகாவின் புலன் விசாரணை அதிகாரிகளின் பலவீனத்தைக் காட்டுகிறது.

இது குறித்து 2009 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை நேர்மை ஆணையத்தின் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படும் என்று அந்த ஆணையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS