கோலாலம்பூர், மே.20-
கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் மாநாட்டை முன்னிட்டு, தங்கள் பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு போக்குவரத்துப் போலீசார் நினைவுறுத்தியுள்ளனர்.
வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் மே 28 ஆம் தேதி வரை கோலாலம்பூர் மாநகரில் பல சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படவிருக்கின்றன.
இக்காலக் கட்டத்தில் கோலாலம்பூருக்குள் பயணம் செய்ய அவசியம் உள்ள பொதுமக்கள், தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சாலைப் போக்குவரத்து இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.