கோலாலம்பூர், மே.20-
கால்பந்து, அரசியல் உட்பட எந்தவொரு துறையிலும் தனது செல்வாக்கு ஒரு போதும் மங்கி விடாது என்று ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
ஆனால், தாம் சார்ந்துள்ள துறைகள், தொடர்ந்து வளர்வதற்கான சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக அவை விளங்கும் என்று துங்கு இஸ்மாயில் வலியுறுத்தினார்.
கலைநிகழ்ச்சிச் சம்பவம், ரமலான் பஜார், மற்றும் தேசிய கால்பந்து வீரர் பைஃசால் ஹாலிம் சம்பந்தப்பட்ட விவகாரம் உள்ளிட்ட தற்போதைய பல்வேறு பிரச்சினைகளுடன் தன்னை அடிக்கடி தொடர்புப்படுத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் ஊகங்களை துங்கு இஸ்மாயில் நிராகரித்தார்.
ஜோகூரில் உள்ள ரமலான் பஜார், தனக்குச் சொந்தமானது என்ற கூற்று, குறித்தும் துங்கு இஸ்மாயில் பேசினார்.
“என் முகம் ரமலான் பஜாரில் ஆதாயம் ஈட்ட விரும்பும் ஒருவரைப் போல இருக்கிறதா?” என்று துங்கு இஸ்மாயில் கிண்டலாகக் கேள்வி எழுப்பினார்.
உள்ளூர் பன்க் இசை நிகழ்ச்சியில் நடந்த சண்டையுடன் தன்னைத் தொடர்புப்படுத்தும் முயற்சிகளையும் ஜோகூர் இளவரசர் கடுமையாகச் சாடினார். இந்தக் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை என்று அவர் விவரித்தார்.
தனது முகம் பன்க் இசை நிகழ்ச்சியில் தலையை ஆட்டிக் கொண்டே நேரத்தைச் செலவிடும் ஒருவரைப் போல இருக்கிறதா?” என்றும் அவர் வினவினார்.