கோலாலம்பூர், மே.20-
இவ்வாரத்தில் நடைபெறும் பிகேஆர் கட்சியின் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதற்கு மீண்டும் போட்டியிடும் ரஃபிஸி ரம்லியின் தேர்தல் பிரச்சார நடைமுறையை, பேராளர்கள் நிராகரிக்கக்கூடும் என்று பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸீ ஸின் தெரிவித்துள்ளார்.
தீவிர அரசியல் போக்குடைய ரஃபிஸி ரம்லியின் தேர்தல் பிரச்சாரம் அறவே ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் என்ற போர்வையில் ரஃபிஸி ரம்லி கையாளும் அணுகுமுறை மக்கள் மத்தியில் பிகேஆர் கட்சிக்குத் தவறானத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.