இரு மாணவிகள் மானபங்கம்: பள்ளி வேன் ஓட்டுநர் கைது

ஜோகூர் பாரு, மே.20-

இரு மாணவிகளை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் பள்ளி வேன் ஓட்டுநர் ஒருவர், நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

58 வயதுடைய அந்த வேன் ஓட்டுநர், ஜோகூர்பாரு, தாமான் டேசா ஹார்மோனியில் கைது செய்யப்பட்டதாக ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏஎஸ்பி முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த வேன் ஓட்டுநர் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தாமான் மோலேக்கைச் சேர்ந்த எட்டு வயது சிறுமியும், தாமான் ரெடாங்கைச் சேர்ந்த 7 வயது சிறுமியும் பள்ளி வேனில் மானபங்கப்படுத்தப்பட்டதாக அந்த மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளதாக ஏஎஸ்பி முகமட் சொஹைமி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS