கோவில் சிலைகளை உடைத்த நபர், தீவிரவாதி அல்ல

அம்பாங், மே.20-

அம்பாங், தாமான் ஶ்ரீ அம்பாங்கில் கோவில் சிலைகளை உடைத்ததாக நம்பப்படும் ஆடவர், தீவிரவாதப் பின்னணியைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, போதைப் பொருளில் உந்தப்பட்டு, இந்த நாசக் காரியத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் உள்ளூரைச் சேர்ந்த 33 வயதுடைய அந்த ஆடவர், சம்பவம் நிகழும் போது, Methamphetamine வகையைச் சேர்ந்த போதைப் பொருளை உட்கொண்டுள்ளார் என்பது சிறுநீர் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிடிபட்ட நபரிடமிருந்து ஒரு சுத்தியல், இரும்பு வெட்டி, இரண்டு வெட்டுக் கத்திகள், ஒரு கிரிஸ் கத்தி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏசிபி முகமட் அஸாம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS