கோலாலம்பூர், மே.20-
2024 ஆம் ஆண்டின், நான்காம் காலாண்டில் மலேசியாவில் தகவல் திருட்டு தொடர்புடைய சம்பவங்கள் 78 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதிகரித்து வரும் சைபர் அச்சுறுத்தல்களின் சிக்கலானத் தன்மை மற்றும் அளவு குறித்து எச்சரிக்கை சமிக்ஞையை இது விடுத்துள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
சைபர் அச்சுறுத்தல்களைத் துடைத்தொழிக்க உலகளாவிய நிலையில் வலுவாக ஒத்துழைப்புக்குரிய தயார் நிலைக்கான அவசர அழைப்புகளை இது தூண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் அனைத்துலக அளவில் ஒன்றுப்பட வேண்டிய அவசியத்தை இந்த எழுச்சி எடுத்துக் காட்டுகிறது என்று கோபிந்த் சிங் தெரிவித்தார்.
பெருகி வரும் இன்றைய சைபர் அச்சுறுத்தல்கள் அதிநவீனமானவை மற்றும் எல்லையற்றவை என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
சைபர் தாக்குதல்கள், தரவு மீறல்கள், சைபர் சார்ந்த மோசடிகள் ஆகியவை சிக்கலானத் தன்மையில் அதிகரித்து வருவதாக கோலாலம்பூரில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான சைபர் கேம்ஸ், தொடக்க விழாவில் உரையாற்றுகையில் கோபிந்த் சிங் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சரின் உரையை இலக்கவியல் அமைச்சின் தலைமைச் செயலாளர் பாஃமியன் பிகார் வாசித்தார்.