பட்டர்வொர்த், மே.20-
கடந்த வாரம் வியாழக்கிழமை பட்டர்வொர்த், ஜாலான் ராஜா ஊடாவில் உள்ள ஓர் உணவகத்தில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று ஆடவர் ஒருவரைப் பாராங்கினால் சரமாரியாக வெட்டி, படுகாயம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார், மேலும் ஐவரைக் கைது செய்துள்ளனர்.
30 வயது மதிக்கத்தக்க அந்த ஐந்து சந்தேகப் பேர்வழிகளும் பினாங்கில் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் C. தர்மலிங்கம் தெரிவித்தார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் ஐவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக தர்மலிங்கம் மேலும் கூறினார்.