பினாங்கிற்கும், கம்போடியாவுக்கும் நேரடி விமானச் சேவை

ஜார்ஜ்டவுன், மே.20-

பினாங்கிற்கும், கம்போடியா தலைநகர் நோம்பெனுக்கும் இடையில் நேரடி விமானச் சேவை தொடங்கப்படவிருக்கிறது. இந்தப் புதிய வழித் தடத்தை பினாங்கு மாநில அரசு வரவேற்றுள்ளது.

கம்போடியாவின் அதிகாரத்துவ விமான நிறுவனமான கம்போடியா ஏர்வேய்ஸ், வரும் ஜுன் 26 ஆம் தேதி, நோம்பெனுக்கும், பினாங்கிற்கும் நேரடி விமானச் சேவையை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இந்தப் புதிய வழித் தடம் குறித்து கம்போடியா ஏர்வேய்ஸ் உறுதிப்படுத்தியிருப்பதாக பினாங்கு சுற்றுலா, புத்தாக்கம் மற்றும் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS