கோல லங்காட், மே.20-
மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரை மோதித் தள்ளி மரணம் விளைவித்ததாக லோரி ஓட்டுநர் ஒருவர், கோல லங்காட், தெலுக் டத்தோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
32 வயது எஸ். மோகனதாஸ் என்ற அந்த லோரி ஓட்டுநர், மாஜிஸ்திரேட் மஸ்லிண்டா செலாமாட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த மே 14 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகில் ஜாலான் பந்திங் சாலையின் 13 ஆவது கிலோமீட்டரில் 43 வயது முகமட் நஸ்ரி சம்சூரி என்ற மோட்டார் சைக்கிளோட்டிக்கு மரணம் விளைவித்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 15 ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் மோகனதாஸ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.