கோலாலம்பூர், மே.20-
புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்குச் செல்வதாகக் கூறி, வீட்டை விட்டுப் புறப்பட்ட வர்த்தகப் பெண்மணி டத்தின் ஶ்ரீ பமேலா லிங், காணாமல் போன நிலையில் அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவலை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் மறுத்தார்.
அதே வேளையில் பமேலா லிங் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஓன்லைன் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தி தொடர்பில் அந்த செய்தி நிறுவனத்திற்கு எதிராக விசாரணை செய்யப்பட்டு வருவதாக டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.
பமேலாவின் சடலம், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இச்செய்தி தொடர்பில் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்திற்கு எதிராக குற்றவியல் சட்டம் 504 மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக டத்தோ ஹுசேன் தெரிவித்துள்ளார்.