நம்பிக்கை மோசடி செய்ததாக முன்னாள் வங்கி ஊழியர் மீது குற்றச்சாட்டு

அலோர் ஸ்டார், மே.20-

வாடிக்கையாளருக்குச் சொந்தமான 55 ஆயிரம் ரிங்கிட்டை நம்பிக்கை மோசடி செய்ததாக வங்கி அதிகாரி ஒருவர் அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

41 வயது முகமட் அப்துல் ரஹ்மான் ஹம்ஸா என்ற அந்த வங்கி ஊழியர், பாடாங் தெராப்பில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றியக் காலத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட ஊழியர், வாடிக்கையாளரின் அனுமதியின்றி அவருக்குச் சொந்தமானப் பணத்தைச் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS