ஈப்போ, மே.20-
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தெலுக் இந்தானில் நிகழ்ந்த கோரச் சாலை விபத்தில் காயமுற்ற எப்ஃஆர்யூ போலீஸ்காரர்களில் மூன்று பேர், மருத்துவமனையில் இன்னமும் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் உள்ளனர் என்று ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டாக்டர் பக்ரி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.
தெலுக் இந்தான் மருத்துவமனையில் மூவர் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் வேளையில் மேலும் ஒருவர், வழக்கமான வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏசிபி டாக்டர் பக்ரி குறிப்பிட்டார்.
தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் உள்ள மூவரில் இருவர் சுயநினைவுக்குத் திரும்பி விட்டனர். மேலும் ஒருவருக்கு இன்று காலையில் அறுவை சிகிச்சை நடைபெற்று இருப்பதாக அவர் தெரிவித்தார்.