எம்ஆர்எஸ்எம் மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக இராணுவ சார்ஜன் மீது குற்றச்சாட்டு

மலாக்கா, மே.20-

தங்கும் வசதியைக் கொண்ட எம்ஆர்எஸ்எம் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவரை வெளியில் அழைத்துச் சென்று, பாலியல் பலாக்காரம் புரிந்தததாக இராணுப்படையைச் சேர்ந்த சார்ஜன் ஒருவர் மலாக்கா, ஆயர் கெரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

32 வயது முகமட் ஸுல்பிஃகார் இஷாக் என்ற அந்த இராணுவ அதிகாரி, நீதிபதி ஹடேரியா சிரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

12 வயதுடைய அந்த மாணவியைத் தன்னுடைய பெரோடுவா வீவா காரில் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த இராணுவ அதிகாரிக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த மே 4 ஆம் தேதி மதியம் ஒரு மணியளவில் மலாக்கா, செங்கில் உள்ள ஈரச் சந்தையின் கார் நிறுத்தும் இடத்தில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS