சோவ் கோன் யோவ் விளக்கமளிக்க வேண்டும்

ஜார்ஜ்டவுன், மே.20-

பினாங்கு மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை குறித்து அதன் இந்நாள் முதல்வர் சோவ் கோன் யோவ் விளக்கமளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2019இல் மாநிலத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 1.15 பில்லியன் ரிங்கிட்டில் இருந்து 2024-இல் 50 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைந்துள்ளது. இது ஐந்து ஆண்டுகளில் 1.1 பில்லியன் ரிங்கிட் வீழ்ச்சியைக் காட்டுகிறது என்று லிம் சுட்டிக் காட்டினார்.

500 மில்லியன் ரிங்கிட் பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய அரசிடம் இருந்து 100 மில்லியன் ரிங்கிட் முன்கூட்டியே பெற்றதை அடுத்து பினாங்கின் நிதி நிலை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பினாங்கு மேம்பாட்டுக் கழகமான பிடிசிக்கு மாநில அரசு செலுத்த வேண்டிய 300 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான கடன் குறித்தும் கேள்வி எழுப்பினார் லிம் குவான் எங். கடந்த 2023-இல் எந்தக் கடனும் இல்லை என்று சோவ் கோன் யோவ் கூறியதற்கு முரணானது என்றார் அவர்.

WATCH OUR LATEST NEWS