தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகும்

ஜோகூர் பாரு, மே.20-

பிகேஆர் கட்சியின் மத்தியத் தலைமைத்துவத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகும். கட்சிப் பொதுச் செயலாளர் புஃஸியா சால்லே கூறுகையில், மத்தியத் தலைமைக் குழு, இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவு ஆகியவற்றுக்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகராளிகள் இதில் பங்கேற்பார்கள். அவர்களில் 9 ஆயிரம் பேர் நேரில் வாக்களிப்பார்கள், மீதமுள்ளவர்கள் இயங்கலையில் வாக்களிப்பார்கள். கட்சித் தலைவர் பதவிக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸா அன்வாருக்கும் தற்போதையப் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லிக்கும் இடையே நேரடிப் போட்டி இருக்கும்.

WATCH OUR LATEST NEWS