புத்ராஜெயா, மே.20-
பணி ஓய்வுப் பெறும் வயதை 60 லிருந்து 65 க்கு உயர்த்துவதற்கு ஆய்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட், அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கட்டாயப் பணி ஓய்வுக்குரிய வயதான 60 வயதை, 65 க்குக் கொண்டுச் செல்ல வேண்டிய அவசியமும், அவசரமும் இருப்பதாக அஸாலினா குறிப்பிட்டார்.
60 வயது பணி ஓய்வுக்குப் பிறகும் பலர் உடல் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் இருக்கின்றனர். தொழில் ரீதியாக அவர்கள் பெற்ற அனுபவம் வீணடிக்கப்பட்டு விடக்கூடாது. அவர்களின் அனுபவத்தையும், அறிவு முதிர்ச்சியையும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அஸாலினா வலியுறுத்தியுள்ளார்.
கட்டாயப் பணி ஓய்வுப் பெறும் 60 வயதைக் கொண்டவர்களைப் பல நாடுகள், இன்னமும் இளையோர் பட்டியலில் வகைப்படுத்தியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.