அலோர் ஸ்டார், மே.21-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 220.2 ஆவது கிலோமீட்டரில் மலாக்கா, அலோர் காஜாவிற்கு அருகில் ஒரு லோரி மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினார்.
நேற்றிரவு 7.40 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 21, 45 வயதுடைய இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.
மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டியான 18 வயது ஆர். ஜீவகுமார் என்பவர், கைகால் முறிவுக்கு ஆளாகி மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அஷாரி அபு சாமா குறிப்பிட்டார்.