துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது குற்றச்சாட்டு

பட்டர்வொர்த், மே.21-

ஆடவர் ஒருவரைச் சுட்டுக் கொன்றது தொடர்பாக கடந்த 12 ஆண்டு காலமாகப் போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் இறுதியில் பிடிபட்டுள்ளார்.

கார் உபரிப்பாகங்கள் விற்பனைக் கடையின் பணியாளரான 38 வயதுடைய நபர், இன்று பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அவருக்கு எதிராகக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

38 வயது ஊய் சின் லேங் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் அய்னி அடிலா முகமட் பைஃஸால் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி காலை 5.25 மணியளவில் பட்டர்வொர்த், தாமான் டேசா முர்னி, சுங்கை டூவாவில் 24 வயதுடைய போஃவ்ஸி ஹுசேன் என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக அந்த நபருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை பினாங்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அந்த நபருக்கு எதிராக வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

WATCH OUR LATEST NEWS