ரீமேக் பட இயக்குனர் என்ற பெயரை சுமந்துகொண்டு கஷ்டப்பட்ட மோகன் ராஜா அந்த பெயரை மாற்ற வேண்டும் என்று தனி ஒருவன் என்ற கதையை இயக்கி தன்னை நிரூபித்தவர். தனி ஒருவன் படத்தில் ரவி மோகன், நயன்தாரா, அரவிந்த் சாமி என பலர் நடிக்க கடந்த 2015ம் ஆண்டு வெளியானது.
வணிக ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக அமைந்தது. தனி ஒருவன் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு 2ம் பாகம் வருவதாக அறிவித்தனர்.
மோகன் ராஜா தனி ஒருவன் 2 குறித்து அண்மையில் ஒரு பேட்டியில், “தனி ஒருவன் 2 மீது இவ்வளவு ஆர்வமாக இருப்பதற்கு அனைவருக்கும் நன்றி. எங்களுடைய பெருமைக்குரிய படம் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா சொல்லிக் கொண்டே இருப்பார். கதை எல்லாம் கேட்டுவிட்டு சிறப்பா இருக்கு, சரியான நேரம் வரும்போது சொல்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்” என்றார்.