இயக்குனர் மணிரத்னத்தின் புதிய படத்தில் இணையும் நடிகை

மணிரத்னம் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநராகப் பயணித்து வருபவர். பல ஆண்டுகளாக பலரும் முயற்சி செய்து எடுக்க முடியாத, ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கி சாதனை படைத்தார். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்து மணிரத்னம், காதல் கதையைக் கொண்ட ஒரு படம் எடுக்கப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிக்க பிரபல நடிகை ருக்மணி வசந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவர் விஜய் சேதுபதி உடன் இணைந்து ‘ஏஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘மதராஸி’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

WATCH OUR LATEST NEWS