சிரம்பான், மே.21-
மின் சிகரெட்டான வேப் விற்பனையை, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தடை செய்யப்படுவது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் மாநிலம் எடுக்கக்கூடிய இந்த முடிவானது, சுகாதார அமைச்சின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அமினுடின் ஹாருன் குறிப்பிட்டார்.