பெக்கான், மே.21-
வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக நம்பப்படும் குடும்ப மாது ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மார்ச் 20 ஆம் தேதி ஆயுமேந்திய நான்கு முகமூடி கொள்ளையர்கள், பகாங், பெஃல்டா சினியில் வீட்டில் தன்னைக் கத்திமுனையில் மடக்கி, தனது மாமியாருக்குச் சொந்தமான 12 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள விலை உயர்ந்த ஆபரணங்களைக் கொள்ளயடித்துள்ளனர் என்று 27 வயது மதிக்கத்தக்க மாது போலீசில் புகார் செய்து இருந்தார்.
இது குறித்து போலீசார் தீவிரமாக ஆராய்ந்ததில் அந்தக் கொள்ளைச் சம்பவத்திற்குப் பின்னணியில் இருந்து மூளையாகச் செயல்பட்டவரே அந்த மாதுதான் என்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பெக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைடி மாட் ஸின் தெரிவித்துள்ளார்.