மலேசிய விஞ்ஞானி ரவிகாதேவி, ராயல் சோசைட்டியில் இணைகிறார்

கோலாலம்பூர், மே.21-

மலேசியாவைச் சேர்ந்த விஞ்ஞானியான டாக்டர் ரவிகாதேவி சம்பந்தமூர்த்தி, பிரிட்டனின் தேசிய அறிவியல் அகாடமியான ராயல் சோசைட்டியில் முதன் முறையாக இணையவுள்ளார்.

ஜோகூர் பாருவில் 1955-ஆம் ஆண்டு பிறந்த ரவிகாதேவி, தற்போது பெட்டாலிங் ஜெயாவில் வசிக்கின்றார். வரும் ஜூலை 11 ஆம் தேதி ராயல் சோசைட்டியில் இணைய உள்ளார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னோடி விஞ்ஞானிகளை உள்ளடக்கிய ராயல் சோசைட்டியில் மலேசியர் ஒருவர் இடம் பெற்றிருப்பது, நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

எம்பிஓசி எனப்படும் மலேசிய செம்பனை எண்ணெய் வாரியத்தில் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றும் ரவிகாதேவி, 1979-ல் மலாயா பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியல் மற்றும் நுண்ணுயிரியல் துறையில் பட்டம் பெற்று, 1983-ல் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பிஎச்டி முனைவர் படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS