தோட்டத் தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைக்கப்படுவதை சங்கம் வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்காது

மெந்தாக்காப், மே.21

குறைந்தபட்சச் சம்பளம் 1700 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்ட பின்னர் தோட்டத் தொழிலார்களின் வேலைப் பளு, இரட்டிப்பாக அதிகரிக்கப்படுவதை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கப்படுவதைச் சங்கம் வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்காது என்று மெந்தாக்காப்பில், இன்று தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பகாங் மாநில பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஜி. சங்கரன் இதனைக் குறிப்பிட்டார்.

சாமானியத் தோட்டத் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட தோட்டத் தொழிற்சங்கம், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும், அவர்களின் உரிமைக்காகப் போராடுவதிலும் பின்வாங்காது என்று டத்தோ ஜி. சங்கரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS