ஜார்ஜ்டவுன், மே.21-
பினாங்கு தீவையும், பெருநிலத்தையும் இணைக்கும் கடலடிச் சுரங்கப் பாதைத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கு பதிலாக மூன்றாவது பாலத்தை நிர்மாணிக்கும் யோசனை குறித்து பினாங்கு மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இது தொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, நீரிணையைக் கடக்கும் பாலத்தை நிர்மாணிப்பது குறித்த யோசனை பரிசீலிக்கப்படலாம் என்ற பினாங்கு மாநில கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஸைரில் கீர் ஜொஹாரி தெரிவித்தார்.
பினாங்கு சட்டமன்றத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த ஆளுநர் துன் ரம்லி ஙா தாலிப், ஆற்றிய உரை மீதான விவாதத்தில் ஸைரில் கீர் இதனைத் தெரிவித்தார்.