பிகேஆர் இளைஞர்- மகளிர் மாநாட்டைப் பொதுச் செயலாளர் தொடக்கி வைக்கிறார்

ஜோகூர் பாரு, மே.21

பிகேஆர் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு மாநாடு, நாளை வியாழக்கிழமை ஜோகூர் பாருவில் தொடங்குகிறது.

இவ்விரு மாநாட்டையும் ஏக காலத்தில் தொடக்கி வைப்பதற்கு பிகேஆர் கட்சியின் நடப்புத் துணைத் தலைவரும், பொருளாதார அமைச்சருமான ரஃபிஸி ரம்லி மறுத்து விட்டதைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் புஃஸியா சால்லே அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவிருக்கிறார்.

மாநாட்டைத் தொடக்கி வைப்பதற்கு தமக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பைத் தாம் ஏற்றுக் கொண்டு இருப்பதாக புஃஸியா சால்லே அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS