இஸ்கண்டார் புத்ரி, மே.21-
கடந்த சனிக்கிழமை, ஜோகூர், ஸ்கூடாய், தாமான் முத்தியாரா எமாஸில் உள்ள ஓர் உணவகத்தில் பாராங், பிரம்பு போன்றவற்றை ஆயுதமாகப் பயன்படுத்தி, நடந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 13 வயது சிறுவன் உட்பட 19 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நள்ளிரவு 12.40 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 20 வயது உள்ளூர் பெண் பாதிக்கப்பட்டதுடன், அவர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் எம். குமரேசன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டப் பெண், தனது மூன்று ஆண் நண்பர்களுடன் அமர்ந்திருந்த வேளையில் இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 19 சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டதாக குமரேசன் மேலும் கூறினார்.