பிரமாண்டமான இசை நிகழ்ச்சி

பிரிக்ஃபில்ஸ், மே.22-

Vshal steremxy ஏற்பாட்டில் தாமரை ஜுவல்ஸ், தஸ்லி நிறுவனம் ஆகியவையின் இணை ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் 28 ஆம் தேதி மாலை 6,30 மணி கோலாலம்பூர், மெனாரா பிஜிஆர்எம்மில் உள்ள டேவான் வாவாசான் மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது ஸீ தமிழ் ச ரி க ம ப லில் சாம்ப்ஸ் லிவ் இன் கேஎல் இசை நிகழ்ச்சி.

அந்நிகழ்ச்சி குறித்த முன்னோட்டச் செய்தியாளர் சந்திப்பும் அதே போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்டு 3வது இடத்தை வென்ற ஹேமித்ரா ரவிச்சந்திரனுக்குப் பாராட்டு நிகழ்ச்சியும் இன்று பிரிக்ஃபில்ஸ், ஜாலான் துன் சம்பந்தனில் அமைந்துள்ள ஈரோடு அம்மன் மேஸ் உணவகத்தில் நடைபெற்றது.

ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ மு. சரவணனின் தலைமையில் நடைபெற இருக்கும் இந்த இசை நிகழ்ச்சியில் அண்மையில் உலகத் தமிழ் இசை ஆர்வலர்களின் மனம் கவர்ந்த ஸீ தமிழ் ச ரி க ம ப லில் சாம்ப்ஸின் இளம் பாடல் நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என ஏற்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த விஷால் தெரிவித்தார்.

பாடகர்களைத் தவிர, ஒட்டு மொத்த இசை நிகழ்ச்சியும், தொழில்நுட்பக் கலைஞர்களும் முழுக்க முழுக்க மலேசியர்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மலேசியக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும் இந்த இசை நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்ய அமைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என விஷால் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS