கொண்டோமினியம் வீடு தீப்பற்றிக் கொண்டது: மூவருக்கு மூச்சுத் திணறல்

சுங்கை பூலோ, மே.22

கொண்டோமினியம் வீடொன்று, தீப்பிடித்துக் கொண்டதில் தப்பிக்க முயற்சித்த மூவர் கடும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். இச்சம்பவம் இன்று காலை 6.20 மணியளவில் சிலாங்கூர், சுங்கை பூலோ, புக்கிட் ரஹ்மான் புத்ராவில் நிகழ்ந்தது.

காலை 6.31 மணியளவில் பெறப்பட்ட அவசர அழைப்பைத் தொடர்ந்து சுங்கை பூலோ தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஒன்பது வீரர்கள், நிலையத்திலிருந்து 3.7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில இயக்குநர் வான் முகமட் ரஸாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

காலை 6.46 மணியளவில் சம்பவ இடத்தைச் சென்றடைந்த தீயணைப்பு வீரர்கள், 16 ஆவது மாடியில் எரிந்து கொண்டு இருந்த வீட்டில், தீயை, சுமார் 20 நிமிடத்திற்குள் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்று அவர் கூறினார்.

வீடு, 80 விழுக்காடு அழிந்த நிலையில், கடும் புகையின் காரணமாக மூவர் கடும் மூச்சுத் திணறலுக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS