ஈப்போ, மே.22
இரு வயோதிகர் பயணித்த கார், போஃர் வில் டிரைவ் வாகனத்துடன் மோதி, விபத்துக்குள்ளானதில் அவ்விருவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 9 மணியளவில் பேரா, முவாலிம் மாவட்டம், தஞ்சோங் மாலிம் அருகில் ஜாலான் கோல ஸ்லிமில் நிகழ்ந்தது. முகமட் ஷாரிஃப் ஹாஷிம் மற்றும் ஷாஹாருடின் அமான் என்ற 73 வயதுடைய இருவரும் கடுமையான காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
இரு முதியவர்களும் சுங்க்கை, டெல்டா கூனுங் பெசாவுட் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுஹைமி முகமட் தெரிவித்தார்