கோலாலம்பூர், மே.22
கோலாலம்பூரில் தொடங்கவிருக்கும் 46 ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டை முன்னிட்டு, நாளை வெள்ளிக்கிழமை முதல் பல்வேறு சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படவிருப்பதால், நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தவிருக்கும் வாகனமோட்டிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆசியான் பேராளர்களின் வருகையையொட்டி புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து போலீசாரின் ஆலோசனைக்கு ஏற்ப நெடுஞ்சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படவிருப்பதாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலை வாரியமான பிளஸ் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.