கோலாலம்பூர், மே.22-
ஒரு மலாய்க்கார முஸ்லிமானத் தன்னை குட்டி, என்று அழைத்துச், சிறுமைப்படுத்தி விட்டதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தொடுத்துள்ள அவதூறு வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு விசாரணையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வரும் ஜுலை 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
குட்டி விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி கோலாலம்பூர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் துன் மகாதீர் ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
அந்த செய்தியாளர் கூட்டத்தில் துன் மகாதீர் வெளியிட்ட தகவல்களின் மூலம் நீதிமன்ற அவமதிப்பு செய்து விட்டதாகக் கூறி, அந்த முன்னாள் பிரதமருக்கு எதிராக துணைப் பிரதமருமான அகமட் ஜாஹிட் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்துள்ளார்.