தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு கமல்ஹாசனின் தக் லைஃப் எனக் கூறலாம். நாயகன் படத்திற்கு பின் மணிரத்னம் – கமல் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது.
மேலும் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜூன் 5ம் தேதி இப்படம் திரையரங்கில் வெளிவருகிறது.
இப்படத்திற்கான விளம்பரப் பணிகளில் படக்குழு இறங்கியுள்ளனர். சென்னை, கொச்சி, மும்பை என தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது. இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் படக்குழுவினர் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்ததில் கமல்ஹாசனுக்கு பிடித்த படம் எது என கேட்டு தேர்வு கொடுத்துள்ளனர். தளபதி, பாட்ஷா அல்லது முள்ளும் மலரும் என மூன்று படங்களில் எது பிடிக்கும் எனத் தொகுப்பாளர் கேட்க, ‘எனக்கு முள்ளும் மலரும் படம் தான் பிடிக்கும்’ என கமல் கூறியுள்ளாராம்.