அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் யார் நடிக்கிறார்

இந்திய முன்னாள் அதிபர் மற்றும் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அப்துல் கலாம் கதாப்பாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் தற்போது, ‘குபேரா’, ‘இட்லி கடை’, ’தேரே இஷ்க் மெய்ன்’ , இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம், விக்னேஷ் ராஜா இயக்கும் படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், தமிழரசன் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் அதிபர் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திலும் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்படத்தை ’ஆதி புரூஷ்’ படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்க உள்ளதாகவும், அப்துல் கலாம் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

‘அப்துல் கலாம்: மிஸைல் மேன் ஆஃப் இந்தியா’ என்ற தலைப்பில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், தனுஷ் தற்போது உள்ள சில முக்கியமான விஷயங்களை முடித்தவுடன் இந்த படத்தில் இணைவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS