ஓப்ஸ் காஸாக் திட்டம்: வியாபாரத் தளங்கள் கண்காணிக்கப்படும்

சிரம்பான், மே.22-

ஓப்ஸ் காஸாக் 2025 திட்டத்தின் வாயிலாக நெகிரி செம்பிலான் மாநில அளவில் செயல்படும் வியாபாரத் தளங்களின் நடவடிக்கைள், அமலாக்க அதிகாரிகள் வாயிலாக தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் தெரிவித்தார்.

அவசியம் ஏற்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சட்ட விதிகளை மீறி செயல்படுவோர் மீது 2021 ஆம் ஆண்டு உள்நாட்டு வாணிபச் சட்டத்தின் 18 ஆவது விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீரப்பன் சுட்டிக் காட்டினார்.

இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைப்பவர்களுக்கு அபராதம் மற்றும் கூடியபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று வீரப்பன் நினைவுறுத்தினார்.

சிரம்பானின் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் வீரப்பன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS