புத்ராஜெயா, மே.22-
வரும் மே 26 முதல் 28 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 46 ஆவது ஆசியான் மாநாட்டை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் உயர்க்கல்விக் கூடங்கள், மாணவர்களுக்கு ஓன்லைன் மூலம் கற்றல், கற்பித்தலை மேற்கொள்வதற்கு உயர்க்கல்வி அமைச்சு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
ஆசியான் மாநாட்டை முன்னிட்டு, கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ராஜெயா உட்பட கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுவதையொட்டி பல சாலைகள் மூடப்படவிருக்கின்றன.
இந்நிலையில் மூன்று தினங்களுக்கு ஓன்லைன் மூலம் கற்றல், கற்பித்தலை மேற்கொள்வதற்கு பொது மற்றும் தனியார் பல்லைக்கழகங்கள் அனுமதிக்கப்படுவதாக உயர்க்கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.