கோத்தா கினபாலு, மே.22-
போலி ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்காக 3 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் 4 முன்னாள் வங்கி அதிகாரிகள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் ஒரு கோடியே 13 லட்சம் ரிங்கிட் கடன் கேட்டுச் சமர்ப்பிக்கப்பட்ட 39 விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் 30 க்கும், 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த ஐவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று காலையில் சபா, சண்டக்கான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த ஐவரையும் விசாரணை செய்வதற்கு ஏதுவாக 7 நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் சித்தி அயிஷா பாக்கி அனுமதி அளித்தார்.