கோலாலம்பூர், மே.22
மலேசியாவில் பணி ஓய்வு பெறும் வயது வரம்பு 60 லிருந்து 65 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் அஸாலீனா ஒத்மான் சையிட் முன் வைத்துள்ள பரிந்துரையை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவுச் செயலாளர் ஹாஃபிஸ் அரிஃபின் கேட்டுக் கொண்டார்.
பணி ஓய்வு பெறும் வயது வரம்பு 65 வயது வரை நீட்டிக்கப்படுமானால், அது இளையோர்களின் வளர்ச்சியையும், அவர்களுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பையும் ஊனப்படுத்தி விடும் என்று அவர் எச்சரித்தார்.
அதே வேளையில் இளையோர்கள் உயரிய பொறுப்பும், அஸ்தஸ்தையும் பெறுவதற்கு ஒரு நீண்ட நாள் காத்திருக்க வேண்டிய பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விடும் என்று அவர் நினைவுறுத்தினார்.
ஒருவர் பணி ஓய்வு பெற்றால் மட்டுமே அந்த இடத்தை நிரப்புவதற்கு இன்னொருவர் நியமிக்கப்படுவார். ஆனால், ஒருவரே நீண்ட காலமாக பொறுப்பை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு இருப்பாயேரானால், அந்த வாய்ப்பு இளையோர்களுக்கு கிட்டுவது என்பது எட்டாக் கனியாகிவிடும் என்று ஹாஃபிஸ் அரிஃபின் தெரிவித்தார்.