மலாக்கா, மே.22-
மலாக்கா, ஜாலான் பூஙா ராயாவில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்தப் பின்னர் தப்பித்து ஓடிய கொள்ளையன் ஒருவன், பொது மக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டான்.
இந்தச் சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் நிகழ்ந்தது. பிடிபட்ட 27 வயதுடைய கொள்ளையன், பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான் என்று மலாக்கா தெஙா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.
கொள்ளையனின் உடலில் சோதனையிட்ட போது தனது காற்சட்டையில் 15.35 கிராம் எடை கொண்ட 5 தங்கச் சங்கிலி மற்றும் சுத்தியல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.