கோலாலம்பூர், மே.22-
கட்டாய பணி ஓய்வு பெறும் வயது வரம்பை 60 லிருந்து 65 ஆக உயர்த்தும் யோசனை குறித்து விரிவான ஆய்வு தேவை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பணி ஓய்வு பெறும் வயது வரம்பை உயர்த்துவது தொடர்பான எந்தவொரு யோசனையும் முதலில் அமைச்சு அளவில் விவாதிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே அந்த யோசனை அமைச்சரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
மக்கள் 60 வயதுக்குப் பிறகும் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் இருப்பதால், மலேசியாவில் 60 வயதில் கட்டாய பணி ஓய்வு பெறும் வயதை 65ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் அஸாலீனா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ள யோசனை குறித்து கருத்துரைக்கையில் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.