சுபாங் ஜெயா, மே.23-
சுபாங் ஜெயா, ஜாலான் எஸ்எஸ் 14 இல் உள்ள அந்நியத் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் அந்நியப் பிரஜை ஒருவர் கொலையுண்டு கிடந்தார்.
நேற்று காலை 6.26 மணியளவில், உள்ளூர் பிரஜையான நிறுவனம் ஒன்றின் முதலாளி செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த அந்நியப் பிரஜையின் உடல் மீட்கப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் பைஃருஸ் ஜாபார் தெரிவித்தார்.
அந்த குடியிருப்பில் ஒரே அறையில் தங்கியிருந்த சக நாட்டுப் பிரஜை, அவரை வெட்டிக் கொன்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பலத்த காயங்களுக்கு ஆளான 28 வயதுடைய நபர், சம்பவ இடத்திலேயே மாண்டார்.
அவரைக் கொலை செய்து இருக்கலாம் என்று நம்பப்படும் 29 வயதுடைய நபரை, அருகில் ஓர் இடத்தில் காலை 8.15 மணியளவில் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.