கோத்தா பாரு, மே
.23-
SPA (ஸ்பா) சிகிச்சை மையத்தை நடத்தி வரும் 27 வயது பெண்ணிடம் எரிதிரவக வீச்சு நடத்தி, கடும் தீக்காயங்கள் ஏற்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளந்தான், பாச்சோக், பெரிஸ் குபுர் பெசார் என்ற இடத்தில் உள்ள ஸ்பா மையத்தில் கடந்த சனிக்கிழமை காலையில் நடந்த இந்தத் தாக்குதல் தொடர்பில் நேற்று 38 வயது மாது ஒருவர் கைது செய்யப்பட்ட வேளையில் 45 வயதுடைய ஓர் ஆணும் பிடிபட்டுள்ளார் என்று பாச்சோக் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இஸ்மாயில் ஜமாலுடின் தெரிவித்தார்.
அந்த ஸ்பா மையம் குறித்து வெளியிடப்பட்ட விளம்பரத்தைக் கண்டு, வாடிக்கையாளர் போல் நடித்து, அவர்கள் இந்த எரிதிரவ வீச்சை நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கானப் பின்னணியை ஆராய்வதற்கு அவ்விருவரும் ஒரு வாரம் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணையை போலீசார் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.