தம்பின், மே.23-
நெகிரி செம்பிலான், தம்பின் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்பு விசாரணைப் பிரிவு அலுவலகம் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்தில் அழிந்தது.
இரவு 7.15 மணியளவில் அந்த அலுவலகத்தில் நாலாபுறமும் தீ சூழ்ந்து விட்டதைக் கண்ட போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், இது குறித்து உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்ததாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் அமிருடின் சரிமான் தெரிவித்தார்.
அந்த அலுவலகம் 100 விழுக்காடு முற்றாக அழிந்தது. அதிர்ஷ்வசமாக உயிர் இழப்பு ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.